ஒரு பேலியோ ஆலோசகரின் குறிப்புக்கள் 48- கொழுப்பு செல்கள் (Adipocytes) பேலியோவில் என்னவாகிறது ?

கொழுப்பு செல்கள், கொழுப்பு நீங்கியபின் அழிவதில்லை. சுருங்குகின்றன.

பேலியோ உணவு முறையில், நம் உடலின் கொழுப்பு செல்களில் (adipocyte) சேமிக்கப்பட்டுள்ள அல்லது அடைபட்டுள்ள கொழுப்பு கரைந்தபின், கொழுப்பு செல்கள் முழுதும் அழிந்து விடுமென்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், கொழுப்பு செல்கள் அழிவதில்லை.கொழுப்பு செல்கள், அதிலுள்ள கொழுப்பு கரைந்த பின் சுருங்கி விடும். நீங்கள் தொடர்ந்து பேலியோ போன்ற “குறை மாவு – நிறை கொழுப்பு” உணவு முறையை, கலோரி குறைபாடுடன்(with calorie deficit) எடுத்துக் கொண்டிருந்தால், கொழுப்பு செல்கள் சுருங்கியே இருக்கும்.

ஆனால், மீண்டும் மாவுச்சத்து அதிகமுள்ள (40 கிராமுக்கு மேல்) உணவு எடுக்கத் தொடங்கினால், செல்களின் இன்சுலின் எதிர்ப்பினால், ரத்தத்தில் தேங்கிக்கிடக்கும் குளுகோஸ், கல்லீரலால் ட்ரைகிளிசரைட்ஸ் கொழுப்பாக மாற்றப்பட்டு, சுருங்கிய கொழுப்பு செல்களில் (adipocyte) மீண்டும் சேமிக்கப்படும். கொழுப்பு செல்கள் கொழுத்துப் பெருக்கும்.

எனவே, கொழுப்பு செல்கள் என்றும் அழிவதில்லை. அவற்றில் சேமிக்கப்பட்டுள்ள கொழுப்பு நீங்கும் போது சுருங்குகின்றன. மீண்டும், ட்ரைகிளிசரைட் கொழுப்பு அதிகமாய் உருவாகும் போது, அதில் சேமிக்கப்படும்.

 

======================================================

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *