About

 

பொறியாளரான இவர், நவீன உணவுப்பழக்கங்கள் மற்றும் உடல்பயிற்சியின்மை காரணத்தால்,  உடல் எடை 104 கிலோவுக்கு ஏறி, உயர் இரத்த அழுத்தத்தால்      பாதிக்கப்பட்டு, பின்னர் பேலியோ உணவுமுறை மூலம்,  30 கிலோ உடல் எடை குறைத்து (தற்போது 78 கிலோ), இரத்த அழுத்ததிலிருந்தும் விடுதலை பெற்று, ஆரோக்கியத்தை மீட்டெடுத்தவர்.

அடிப்படையில் இவர்  இயந்திரவியல்  பொறியியலாளர்.  இந்தியாவின், மிகப்பெரிய கட்டுமான நிறுவனமொன்றில் 18 ஆண்டுகளும், குவைத்தில்   7 வருடங்களும், பல நிலைகளில் பணி புரிந்து, இப்போது சென்னையில் வசிப்பவர்.

சென்னையில் ஒரு சிறிய கட்டுமான நிறுவனத்திலும், கேரளா தேக்கடியில் ஒரு சிறிய தங்கும் விடுதியிலும், பங்குதாரராக உள்ளார்.

ஆரோக்கியம் & நல்வாழ்வு என்ற முகநூல் குழுமத்தில் இணைந்து, பேலியோ உணவுமுறையை தானும் கடைப்பிடித்து, மற்ற தமிழ் மக்களும் கடைப்பிடிக்க தன்னாலான உதவியை, இலவசமாகச் செய்து வந்தவர்.

பேலியோ உணவுமுறை சம்பந்தமாக, தனது அனுபவத்தில் இவர்    படித்து, பரிசோதித்து, தெரிந்து கொண்டவற்றை, கட்டுரை வடிவில்,   ஆரோக்கியம் & நல்வாழ்வு முகநூல் குழுமத்திலும் மற்றும் அதன் சார்பு குழுக்களிலும் தொடர்ந்து பதிப்பித்து வந்தார்.   இனிமேல், பேலியோ பற்றிய இவரது கட்டுரைகள்  இவரது   இந்த இணையதளத்தில் தொடர்ந்து வெளியாகும்.

நீரிழிவு நோயுள்ளவர்கள், பேலியோ உணவு முறை பின்பற்றி பயன்பெற,  ” பேலியோ – சர்க்கரை நோயிலிருந்து நிரந்தர விடுதலை”  என்ற புத்தகத்தை, கிழக்குப்  பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டிருக்கிறார்.

நீரிழிவு நோயில்லா, ஆரோக்கியமான தமிழகம் உருவாக தன்னாலான பங்களிப்பைச் செய்வதையே தன்  வாழ்வின் பெரிய குறிக்கோளாக வைத்துள்ளார்.