தெரிந்து கொள்ளுங்கள் – மருத்துவக் குறிப்பு – 1/ ஆண் கருத்தடுப்பு சிகிச்சை முறையான Vasectomy – வாசெக்டமி

  • வாசெக்டமி என்பது ஆண் கருத்தடுப்பு சிகிச்சை முறை
  • ஆண் விதைக்கொட்டையில் உருவாகும் விந்துக்களை ஆண் குறி வரை சுமந்து செல்லும் குழாயை வெட்டி, மூடி விடுவதே இந்த முறை.

  • இது, விதைப்பையில் சிறிய அறுவை சிகிச்சை முறையில் அல்லது சிறிய துளையிட்டு – “No-Scalpel Vasectomy” (NSV) முறையில்  செய்யப்படுகிறது.
  • இதைச் செய்ய 15 – 30 நிமிடமே தேவைப்படுகிறது. மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியமில்லை. வெளிசிகிச்சை பகுதியிலேயே பெரும்பாலும் செய்யப்படுகிறது.
  • வாசெக்டமி செய்த பின்னும் விதைக் கொட்டைகள் விந்துவை உற்பத்தி செய்யும். ஆனால், நீங்கள் உடலுறவு கொள்ளும்போது விந்துகள் வெளியேறுவதில்லை. வெளியேறாத விந்துகள் சிறிது நேரத்தில் இறந்து விடும். இறந்த விந்துகளை உடல் கிரகித்துக் கொள்ளும்.
  • வாசெக்டமி செய்து முடித்து, 3 மாதங்களுக்கு பிறகே, கருத்தடுப்பு வேலை செய்யும். ஏனெனில், ஏற்கெனவே உருவாகி சேமிப்பில் இருக்கும் எல்லா விந்துகளும், உடலை விட்டு வெளியேறவேண்டும். இதற்கு 15-20 முறை உடலுறவு கொண்டு விந்துகளை, உடலுக்குள்ளேயே வெளியேற்ற வேண்டும். மருத்துவர், உங்களின் விந்துக்களை பரிசோதனை செய்து, விந்தணு நீங்கி விட்டது என்று சொன்ன பின்னரே, உங்களின் கருத்தடை செயல்படத் துவங்கும். அது வரை, பிற கருத்தடை முறைகளை பயன்படுத்த வேண்டும். எனவே, கவனம் தேவை.
  • வாசெக்டமி செய்த பிறகு சிறிதளவு வீக்கம், வலி இருக்கலாம். எனவே, இறுக்கமான உள்ளாடை அணிய வேண்டும்.
  • இது 99 % மேல் சரியாக வேலை செய்யும்.
  • இதை செய்வதானால், ஆண்களின் செக்ஸ் வேட்கை குறைவதில்லை. எப்போதும் போல் அவர்கள் உடலுறவில் ஈடுபடலாம்.
  • வாசெக்டமி செய்த ஆண், எப்போதும் போல் ஓடி, ஆடி, எல்லா வேலைகளையும் செய்ய முடியும். இதனால், உடல் சோர்வு ஏற்படாது.

 

இது மிகமும் பாதுகாப்பான, எளிய, செலவு குறைவான செயல் முறை. ஆனால், பல ஆண்கள் இதற்கு பல பின் விளைவுகள் உள்ளன என்று நினைக்கிறார்கள். இது தவறு.

 

இந்தியாவில்,  நூறு ஆண்களில் ஒருவர் மட்டுமே (1 %) வாசெக்டமி செய்து கொள்வதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.  நமது நாட்டில், குடும்ப கட்டுப்பாடு என்ற பெயரில், பெண்கள் தான் கருத்தடை செய்து கொள்கிறார்கள். பெண்கள் கருத்தடைக்காக மாத்திரை மற்றும் ஊசி போடும்போது, அவர்களுக்கு வாந்தி, மயக்கம், உடல் எடை ஏற்றம், தோல் நிறம் மங்குவது, முகத்தில் கொப்புளங்கள், மாதவிடாய் சமயங்களில் அதிக ரத்தப்போக்கு போன்ற பக்க விளைவுகள் ஏற்படுகின்றன.

 

எனவே, ஆண்களும் முன்வந்து வாசெக்டமி செய்து கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *